ஹோம் /நியூஸ் /மதுரை /

தேவரைப்பற்றி ஆளுநர் ரவிக்கு என்ன தெரியும்? - வைகோ விளாசல்!

தேவரைப்பற்றி ஆளுநர் ரவிக்கு என்ன தெரியும்? - வைகோ விளாசல்!

வைகோ

வைகோ

Thevar jeyanthi | தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai | Madurai | Tamil Nadu

  ஆளுநர் ரவி, முத்துராமலிங்க தேவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.

  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பிளப்பதற்காக ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். தேவரைப்பற்றி ஆளுநர் ரவிக்கு என்ன தெரியும். அவர் முத்துராமலிங்கத் தேவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

  மேலும், மீனாட்சி அம்மன் கோவிலில் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து செல்லும் ஆலய நுழைவு போராட்டம் நடந்த போது ஒத்துழைப்பு அளித்தவர் தேவர். எனவே சாதி, மத வேறுபாடுகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என ஆவேசமாக தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Madurai, Muthuramalinga Thevar, RN Ravi, Thevar Jayanthi, Vaiko