ஹோம் /நியூஸ் /மதுரை /

கார்த்திகை மாத பிறப்பு.. அழகர்கோவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் புனிதநீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...

கார்த்திகை மாத பிறப்பு.. அழகர்கோவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் புனிதநீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...

கார்த்திகை மாத பிறப்பு

கார்த்திகை மாத பிறப்பு

அழகர்கோவில் நூபுரகங்கை தீர்த்தத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, அழகர்கோவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் மற்றும் பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள், மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அழகர்கோவில் ஶ்ரீ நூபுரகங்கை தீர்த்தத்தில் அதிகாலை முதலே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் இராக்காயிஅம்மன் கோவில், மற்றும் பழமுதிர் சோலை மலை முருகன் கோவிலில் சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Also see...'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' பாடல் உருவானது இப்படித்தான்..!

அழகர்கோவில் நூபுரகங்கை தீர்த்தத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாடி வரும் நிலையில், மேலூர் மற்றும் அப்பன்திருப்பதி காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Karthigai Deepam, Madurai