நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாய் மறைவிற்கு பின்னர் வடிவேலு அவரது துக்கத்தை பகிர்ந்துகொண்டார். மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். சரோஜினி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல்நிலை குறைவு காரணமாக திடீரென காலமானார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வடிவேலுவிற்கு தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பேசிய அவர், “மதுரை அப்போலோவில் அவரை சேர்த்திருந்தோம். நல்லா தெம்பா இருந்தாங்க. வீட்டுக்கு வந்து சவுரியமாகிட்டு போலாம்னு இருந்தப்போ நெஞ்சு சளி இருந்ததால பல்ஸ் திடீர்னு இறங்கிடுச்சு.
நான் இங்க பொங்கலுக்கு தான் வந்தேன். பொங்கல் முடியற வரைக்கும் யாரையும் தொந்தரவு பண்ணலை. எல்லா சொந்தகாரங்களும் ஆடு மாடெல்லாம் புடிச்சிட்டு வாங்க. அதுக்கு அப்பறமா தான் போவேன்னு அந்த அம்மா எல்லா ஃபங்ஷனையும் முடிசிட்டு யாரையும் தொந்தரவு பண்ணாம போயிட்டாங்க” என கண்ணீரோடு தனது துக்கத்தை பகிர்ந்து கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu, Apollo hospital, Madurai, Vadivelu family