ஹோம் /நியூஸ் /மதுரை /

தேவர் ஜெயந்தியின்போது பெண்கள் கல்லூரியில் அத்துமீறி நுழைந்த விவகாரம்- 4 பேர் மீது குண்டாஸ்

தேவர் ஜெயந்தியின்போது பெண்கள் கல்லூரியில் அத்துமீறி நுழைந்த விவகாரம்- 4 பேர் மீது குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் கைது

தேவர் ஜெயந்தி விழா - அத்துமீறி கல்லூரியில் நுழைந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  தேவர் ஜெயந்தி விழாவில் கல்லூரியில் அத்துமீறி இருசக்கர வாகனத்தில் நுழைந்து மாணவிகளை ஆபாசமாக பேசி, பாதுகாவலரை தாக்கிய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 வது குருபூஜை கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்  மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும்  தேவரின் முழு திருவுருவ சிலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும்  அரசியல் கட்சியினர் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

  இந்த நிலையில் மதுரை நரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியான லேடி டோக் கல்லூரியில் தேவர் ஜெயந்தி நாளன்று இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் கல்லூரியின் மாணவிகளை ஆபாசமாக பேசியும், அங்கு பணியில் இருந்த பாதுகாவலரை தாக்கியுள்ளனர்.

  இதையும் படிங்க: கொலை வழக்கிலிருந்து தப்பிக்க விபத்தில் இறந்ததாக நாடகம்... சினிமாவை மிஞ்சும் திட்டம் அம்பலமானது எப்படி?

  இது குறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில்  மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாக சூர்யா, முத்து நாணேஷ்,அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டி, முத்து விக்னேஷ், வில்லியம், விமலஜாய் பேட்ரிக் மற்றும் மணிகண்டன் ஆகிய 10 பேர் மீது 143, 448, 268, 323, 308, 506(11) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சூர்யா, அருண், அருண் பாண்டியன், மது நவீஸ் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Gundas Act, Madurai