முகப்பு /செய்தி /மதுரை / மதுரை - திருமங்கலம் இடையே ரயில் சோதனை ஓட்டம்.. எப்படி இருக்கு? அதிகாரிகள் ஆய்வு!

மதுரை - திருமங்கலம் இடையே ரயில் சோதனை ஓட்டம்.. எப்படி இருக்கு? அதிகாரிகள் ஆய்வு!

மதுரை திருமங்கலம் ரயில் பாதை சோதனை ஓட்டம்

மதுரை திருமங்கலம் ரயில் பாதை சோதனை ஓட்டம்

Madurai - thirumangalam Train | சோதனை ஓட்டம் நடைபெறும் போது ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Thirumangalam (Tirumangalam)

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் நடைபெற்ற ரயில் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை திருமங்கலம் இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் இன்று நடைபெற்ற ரயில் சோதனை ஓட்டத்தை பெங்களூர் தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் ஆய்வு செய்தார்.

மதுரை திருமங்கலம் இடையே காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை மோட்டார் ட்ராலி மூலம் ஆய்வு நடைபெற்றது. பிறகு மாலை 3 மணி முதல் 6:00 மணி வரை திருமங்கலம் மதுரை இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டம் நடைபெறும் போது ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வெற்றிகரமாக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை ரயில்வே அதிகாரிகள் 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் நாளை இப்புதிய பாதையில் செய்யப்பட்டுள்ள மின்மயாக்கள் ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே. சித்தார்த்த ஆய்வு செய்ய உள்ளார்.

சிறப்பு ஆய்வு ரயில் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆய்வு நடைபெறும் ஆய்வுக்குப் பின் புதிய இரட்டை ரயில் பாதை மின்தடத்தில் 25 ஆயிரம் வேரல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சிறப்பு ஆய்வு ரயில் இயக்கி சோதனை செய்யப்படவுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Thirumangalam