Home /News /madurai /

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை... அலங்காநல்லூரில் சோக சம்பவம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை... அலங்காநல்லூரில் சோக சம்பவம்

கிணற்றில் குதித்து தற்கொலை

கிணற்றில் குதித்து தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், இதற்கு கடன் பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
அலங்காநல்லூர் அருகேயுள்ள பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்த விவசாயியான முருகன் (38),  அவரது மனைவி சுரேகா (32), மகள் யோகிதா (16), மகன் மோகனன் (11) ஆகியோருடன் அலங்காநல்லூர் அருகே குலமங்கலத்தில் உள்ள கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்குள்ள வீட்டில் வசித்து வந்தார். முருகனின் மகள் மதுரையில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பும், மகன் பாலமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று இரவு தனது உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது குடும்பத்துடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும், தங்களை மீட்டு அடக்கம் செய்து விட வேண்டும் எனவும் கூறிய முருகன் அழைப்பை துண்டித்து அவரது அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பதறிப்போன அந்த உறவினர் உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பார்த்தபோது முருகன் குடும்பத்தினர் கிணற்றில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிணற்றுக்கு அருகே கழுத்து அறுக்கபட்ட நிலையில் கிடந்த முருகனை  மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், கிணற்றுக்குள் இருந்து முருகனின் மனைவி, மகள், மகன் ஆகிய 3 பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Must Read : சென்னையில் பிரபல ரவுடிகளின் தாய்மாமன் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை.. அதிரவைக்கும் பின்னணி

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்தார்களா, அல்லது வேறுஏதும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




 
Published by:Suresh V
First published:

Tags: Alanganallur, Crime News, Madurai, Suicide

அடுத்த செய்தி