ஹோம் /நியூஸ் /மதுரை /

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி : இந்தாண்டும் மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி : இந்தாண்டும் மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு!

மதுரை ஜல்லிக்கட்டு

மதுரை ஜல்லிக்கட்டு

Avaniyapuram jallikattu | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால், மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்த முடிவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Avaniapuram

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவெடுத்துள்ளதாக தென்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15ல் நடைபெற உள்ள நிலையில், போட்டியை நடத்தும் கமிட்டி உரிமை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக சில பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சில ஆண்டுகளாக மாவட்ட  நிர்வாகமே போட்டியை நடத்தியது. இந்தாண்டு ஜல்லிகட்டு போட்டியை நடத்தும் உரிமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவனியாபுரத்தை சேர்ந்த சங்கத்தினரும், அமைப்பினரும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.கண்ணன், "பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இந்த ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துவதில் ஆட்சேபனை இல்லை. பிற அமைப்பினரை நடத்த அனுமதித்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்" என்றார்.

First published:

Tags: Avaniyapuram, Local News, Madurai