Home /News /madurai /

கொள்ளையடிக்க வந்த வீட்டில் அசந்து தூங்கிய திருடன்...

கொள்ளையடிக்க வந்த வீட்டில் அசந்து தூங்கிய திருடன்...

கைது செய்யப்பட்ட திருடன்

கைது செய்யப்பட்ட திருடன்

Madurai : மதுரை பராசக்தி நகரில் கொள்ளையடிக்க வந்த வீட்டில் அசந்து தூங்கிய திருடன்; வீட்டை பூட்டி காவல்காத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தார் உரிமையாளர்.

    மதுரை அவனியாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பராசக்தி நகரைச் சேர்ந்த ரத்தினவேல் வயது 50. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வெளியூர் சென்று இந்த நிலையில் ரத்தினவேல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    மேலும், நேற்று வேலைக்கு சென்ற ரத்தினவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் மர்ம நபர் ஒருவர், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வாலிபர் பார்ப்பதற்கு திருடன் போல இருந்ததால், அவரை உள்ளே வைத்து பூட்டிய ரத்தினவேல் உடனடியாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    Must Read : இன்ஸ்டா காதல்.. 15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மோசடி இளைஞர் உட்பட 4பேர் கைது

    போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞர், மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான நடராஜன் என்பதும் கொள்ளை அடிக்க வந்த இடத்தில் அயர்ந்து தூங்கியதும் தெரிய வந்தது. இந்நிலையில், அவரை கைது செய்த போலீசார், இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - சிவக்குமார், திருமங்கலம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Madurai, Theft

    அடுத்த செய்தி