எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் தான் இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் மருது சகோதரர்களின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அதிமுகவினர் மத்தியில் பேசிய அவர், மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு முதன் முதலில் அரசின் சார்பில் விழா நடத்தியவர் புரட்சி அம்மா, அதனை தொடர்ந்து திருப்பத்தூரில் மணி மண்டபம் அமைத்திருந்தவர் புரட்சித்தலைவர் அம்மா, தற்போது சிவரக்கோட்டையில் மக்கள் கோரிக்கை ஏற்று மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க அரசாணை தந்தவர் எடப்பாடியார் ஆவார்.பதிமூன்றரை கிலோ( 13.1/2)எடைஉள்ள தங்ககவசத்தை ஜெயலலிதா பசும்பொன்னாருக்கு வழங்கினார்கள்,
ஒவ்வொரு ஆண்டும் 27ஆம் தேதி 30 ஆம் தேதி வரை மூன்று நாள் நடைபெறும் குரு பூஜையில் தங்க கவசத்தை அதிமுக சார்பில் அணிவிப்பது தான் 2014 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு துரோகத்தின் விளைவாக அந்த தங்க கவசத்தை அவரின் திருஉருவத்திற்கு சாத்த தடை ஏற்படுத்தி விடுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். இதற்கு தடை ஏற்படுத்திட சூழ்ச்சி செய்தார்கள், சூது செய்தார்கள், அந்தப் பழியை நம்மில் சுமத்த சூழ்ச்சியும் செய்கிறார்கள் என்பதை அறிந்து தான், வங்கி கணக்கை முடக்குப்பார்கிற துரோகிகள் என்று தெரிந்த பின்பு தான் நீதிமன்றத்துக்கு சென்று, எப்படியார் தங்க கவசம் தெய்வீக திருமகனாருக்கு அணிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது இன்றைக்கு நீதிமன்றம் தீர்ப்பை அளித்திருக்கிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதன் மூலம் அவரின் திருமகனாருக்கு கவசம் சாத்திருக்கின்ற காட்சி தென் மாவட்ட மக்களின் மனதிலஉள்ளம் குளிர் செய்தது என்பதை இன்றைக்கு தடுக்க நினைத்தவர்கள்,குழப்பத்தை விளைவிக்கும் நினைத்தவர்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் இன்றைக்கு எடப்பாடியார் முயற்சியிலே அனுபவிக்கப்பட்டுள்ளது.
இது அண்ணாதிமுக சொத்து:
இதுதான் எதார்த்தமான சத்தியமான உண்மை. இது அண்ணாதிமுக சொத்து, அம்மாவின் சொத்து இதை கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் முறையிட்டபோது வங்கி வழங்க தயாராக இருக்கும் பொழுது அங்கே தடை ஏற்படுத்துகிறார்கள். பிறகு நீதிமன்ற ஆணையைப் பெற்று தங்க கவசம் வேண்டும் என்ற பொழுது அங்கேயும் தடை ஏற்படுத்தி விடுகிறார்கள், தேவர் நினைவு ஆலய காப்பாளர்கள் இடத்தில் முறையிடுகிற போது அங்கேயும் சென்று தடை ஏற்படுத்துகிறார்கள், நீங்கள் எத்தனை தடை ஏற்படுத்தினால், தேவர் ஆசி உங்களுக்கு இல்லாத காரணத்தினால் உங்களால் கவசத்தை எடுக்க முடியவில்லை,. எடப்பாடியாருக்கு தேவரின் ஆசி இருப்பதினால் தேவர் திருமேனியிலே தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது.
எடப்பாடியாருக்கு தேவர் ஆசி இருக்கிறது
எடப்பாடியாருக்கு தெய்வதிருமனார் அருளாசி இருந்த காரணத்தினால் தான் அன்னை தமிழகத்தில் முதலமைச்சர் ஆக நான்கரை ஆண்டு காலம் முழு ஆயுளாக இருந்தார், ஓபிஎஸ் க்கு பதவி இல்லை என்ற காரணத்தினால் நீங்கள் செய்கின்ற சூதுகளையும், சூழ்ச்சிகளையும் நாங்கள் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். எடப்பாடியாருக்கு மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆசியும் உண்டு, தேவர் திருமகனார் ஆசியும் உண்டு மூக்கையா தேவர் ஆசியும் உண்டு, ஆனால் விவாதம் செய்கிறார்கள் ஏன் பசும்பொன்னுக்கு எடப்பாடியார் வரவில்லை என்று?அவர்களின் சூழ்ச்சிகளும், சூதுகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது எங்களுக்குத் தான் தெரியும்,
நிச்சயமாக எடப்பாடியார் பசும்பொன்னுக்கு வருவார், காளையார்கோவிலுக்கு வருவார், இந்த உசிலம்பட்டிக்கும் வருவார்.அது நிச்சயமாக நடைபெறும் அந்த நாள் தென் தமிழ்நாட்டில் பொன் நாளாக அமையும், வருகின்ற 30 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட தெய்வத் திருமகனாரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கத்தை செலுத்துகிறார் என்று கூறினார்.
செய்தியாளர்: சிவக்குமார் (திருமங்கலம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Devar Jayanthi, Edappadi Palanisami, Madurai, R.B.Udhayakumar