மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, மொத்தம் 5 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றன. தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் 19.12.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மைய நிர்வாகி பணி :
மாத சம்பளம் : ரூ. 30,000
காலிப்பணியிடம் - 1
தகுதி : இளங்கலை சட்டம் அல்லது முதுகலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம்.
வழக்கு பணியாளர் பணி:
சம்பளம் : ரூ. 15,000
காலிப்பணியிடம் - 1
தகுதி : இளங்கலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம்.
பல்நோக்கு மருத்துவ பணியாளர்:
சம்பளம் : ரூ. 6,400
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
காவலர் பணி:
சம்பளம் : ரூ. 10,000
காலிப்பணியிடம் - 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120766.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அனுப்ப வேண்டிய முகவரி : District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai - 20. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.12.2022.
Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120770.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job vacancies, Local News, Madurai