Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /மதுரை /

“எவனா இருந்தாலும் வாங்கடா...” மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..

“எவனா இருந்தாலும் வாங்கடா...” மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

Madurai Vijay Fans : மதுரையில் உள்ள சுவர்களில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

விஜய் ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 15ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், நேற்றைய தினம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திற்கான ஆடியோ லான்ச் வெளியானது.

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்

இந்நிலையில், மதுரையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர் இளைஞர்களுக்கு இடையே போஸ்டரால் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், இன்று மாணவரணி தளபதி தலைமை மக்கள் இயக்கம் சார்பில் 2023 வாரிசு பொங்கல் எனவும், “எவனா இருந்தாலும் வாங்கடா. எந்த பக்கம் பார்த்தாலும் நாங்க டா. முடிஞ்சா ஜெயிச்சுட்டு போங்கடா..” என்று விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டுமா..! என்று சொல்லும் அளவிற்கு மதுரையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே போஸ்டரால் போட்ட நிலவிக்கொண்டிருக்கிறது.

செய்தியாளர் : யுவதிகா - மதுரை

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Ajith fans, Local News, Madurai, Vijay fans