கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பேருந்துகளில் முதலுதவி பெட்டி கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
போக்குவரத்துறையில் மதுரை மண்டலத்தில் 1004 அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்த பேருந்துகளில் அவசர தேவைக்காக 2010 முதல் 2020 வரை 10 ஆண்டுகளில் 3124 முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டதாக ஆவணங்கள் உள்ளது.
ஆனால் எந்த பேருந்திலும் முதலுதவிபெட்டி இல்லை என்றும் அதில் முதலுதவி பெட்டி வைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் பேருந்துகளில் வைக்கப்பட்ட முதலுதவி பெட்டி விபரங்களை ஆர்.டி.ஐ தகவல் மூலமாக சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் கேட்டுள்ளார்.
இதையும் படிக்க : நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உதயநிதிதான் தமிழக முதலமைச்சர் - கடம்பூர் ராஜு
பெறப்பட்ட ஆர்.டி.ஐ தகவலில் பேருந்துகளில் முதலுதவி பெட்டி வைப்பதற்காக 10 ஆண்டுகளில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 293 ரூபாய் செலவிடப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பேருந்துகளிலும் தற்போது வரை முதலுதவி பெட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் பதில் கூறப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ தகவல்கள் இப்படி சொல்ல மதுரை மண்டலத்தில் 20 அரசு பேருந்துகளில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் குழுகள ஆய்வு மேற்கொண்டு சோதனை மேற்கொண்டது.
கள ஆய்வில், இரண்டு பேருந்துகள் தவிர பிற பேருந்துகள் எதிலும் முதலுதவி பெட்டிகள் இல்லாதது தெரியவந்தது. பேருந்துகளில் முதலுதவி பெட்டி இல்லாமல் இருப்பது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும் என்று மதுரை மண்டல போக்குவரத்து மேலாளர் யுவராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அரசு பேருந்தை இயக்கிய போது அலைபேசியில் பேசிய ஒட்டுநர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்காமல் வெறும் துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதும் ஆர்.டி.ஐ தகவல்கள் மூலமாக அம்பலமாகியுள்ளது.
மதுரை மண்டலத்தில் போக்குவரத்துறையில் நடந்துள்ள அடுத்தடுத்த முறைகேடுகள் அம்பலமாகியுள்ள நிலையில் நடவடிக்கை பாயுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Investigation, Madurai, News 18, News18 Tamil Nadu