மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் 85% சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆரப்பாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கழிப்பறை, கட்டடங்களை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் கூறியதாவது, "கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது ஆட்சி காலத்தில் நிதி நிலை சிறப்பாக முன்னேறியது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னரான 7-8 ஆண்டுகளில் நிதி நிலை மிகவும் மோசமடைந்தது. உற்பத்தியில் 27% கடனுக்கும், 20% வட்டிக்கும் செலவிடப்பட்டது.
திமுக அரசு அமைந்த முதல் ஆண்டே நிதி நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6 மாதத்துக்கு ஒருமுறை மாநிலத்தின் மொத்த வரவு செலவு குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் சில குழப்பங்கள் உள்ளன. பல திட்டங்களை ஒன்றிய அரசின் திட்டம் என சொல்கின்றனர். ஆனால், ஒன்றிய அரசின் பணம் எதுவும் முழுமையாக அளிக்கப்படுவது இல்லை. திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு நிதி வராமல் நம்மால் திட்டத்தை செயல்படுத்த முடியாத சிக்கலும் உள்ளது. நேற்று தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட நிதிநிலை ஆய்வு குறித்த கூட்டம் திருப்தியாக இருந்தது. அதனடிப்படையில் 2022 - 23 நிதியாண்டில் மிக சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா அமல்படுத்திய விஷன் - 2023 என்ற திட்டம் நல்ல திட்டம். அதனை நாங்களும் பின்பற்ற விரும்புகிறோம். அது. அதன்படி 2022 - 23 நிதியாண்டில் உற்பத்தி 24 லட்சம் கோடியாகவும், 2024- 25 நிதியாண்டில் 30 லட்சம் கோடியாகவும் இருக்கும். இதே வளர்ச்சி தொடரும் பட்சத்தில் 2025 - 26 நிதியாண்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.
மேலும், மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசிய அவர், “மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான தரவுதளம் அமைத்தல், பயனாளர்களின் உண்மை தன்மையை ஆராய்தல் உள்ளிட்ட பணிகள் 85% நிறைவு பெற்றுள்ளன. அதனை 2023 பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai, Minister Palanivel Thiagarajan, Welfare scheme, Women Empower