Home /News /madurai /

திமுகவுடன் தொடர்பில்லை என ஓபிஎஸ் நிருபித்தால் கட்சியில் சேர்ப்பது பற்றி தலைமை முடிவெடுக்கும் - ராஜன் செல்லப்பா

திமுகவுடன் தொடர்பில்லை என ஓபிஎஸ் நிருபித்தால் கட்சியில் சேர்ப்பது பற்றி தலைமை முடிவெடுக்கும் - ராஜன் செல்லப்பா

எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

திமுகவுடன் தொடர்பில்லை என நிரூபித்தால் ஓ.பி.எஸ்.,யும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றால் சசிகலாவையும் கட்சியில் இணைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    திமுகவுடன் தொடர்பில்லை என நிரூபித்தால் ஓ.பி.எஸ்.,யும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றால் சசிகலாவையும் கட்சியில் இணைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

    அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் இருக்கும் 10 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதிகளின் 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் எம்.எல்.ஏக்கள் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் பெரியபுள்ளான் ஆகியோர் வழங்கினார்கள்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில், "சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வினால் திமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர், மகளிர் இலவச பேருந்துகளில் ஏறுவதற்கு பெண்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். பயனற்ற பேருந்துகள் மட்டுமே இலவச பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது.

    Also Read : நீட் தேர்வுக்கு எதிராக அண்ணாமலையும் குரல் கொடுக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

    ஓ.பி.எஸ் இனி எந்தவொரு தவறான வழிக்கும் செல்ல மாட்டார் என நினைக்கிறேன். ஓ.பி.எஸ் உடன் இருப்பவர்கள் அவரை தவறான வழிக்கு அழைத்து செல்கிறார்கள். ஓ.பி.எஸ் திமுகவுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால் அதிமுகவில் சேர்க்க நினைக்கலாம், ஆனால், தற்போது அது நடைபெற வாய்ப்பு இல்லை. சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும்" என கூறினார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: ADMK MLA, EPS, OPS

    அடுத்த செய்தி