ஹோம் /நியூஸ் /Madurai /

மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு இருசக்கர வாகனத்தை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்!!

மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு இருசக்கர வாகனத்தை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்!!

இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்

இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்

திருமண விழாவிற்கு வந்த உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதுடன், மறக்கமுடியாத நினைவாக இருக்கும் என இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக மணமக்கள் கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரையில் தம்பதி ஒருவர் தங்களது திருமணத்திற்கு வந்தவருக்கு இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலம் காலமாக திருமணம் என்றாலே வாழ்த்த வந்தவர்களுக்கு மனதார விதவிதமான பதார்த்தங்களுடன் அறுசுவை விருந்து வைப்பது என்பது நமது நாட்டில் பாரம்பரியமாக கடைபடிக்கப்பட்டு வரும் நடைமுறை ஆகும்.

அதேபோல், ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய தருணமாக கருதப்படும் திருமணத்தை அந்த தம்பதியினர் மட்டும் நினைவில் கொள்ளாமல், அந்த திருமணத்திற்கு வாழ்த்த வந்தவர்களும் மறக்காத வண்ணமாக இருக்கும் வகையில், அவர்களுக்கு அன்பளிப்புகளையும் சில தம்பதியினர் வழங்கி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மதுரையில் திருமணம் என்றால், அதில் ஏதேனும் விநோதம், புதுமை இல்லாமல் இருக்காது.

அந்தவகையில், மதுரையில் ஒரு தம்பதி தங்களது திருமணத்திற்கு வந்தவருக்கு இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண  மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் - ஜோதி பிரியா இருவருக்கும் திருமணம்  நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். இருவீட்டாரின் சார்பிலும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டி இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படும் என இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் தெரிவித்திருந்தனர்.

Must Read : அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனடிப்படையில் திருமண வீட்டிற்கு வருகை தந்த அனைவரும் தங்களது பெயர்களை எழுதி டோக்கன் கொடுத்தனர். பின்பு மணமக்கள் முன்னிலையில் டோக்கன்கள் குளுக்கப்பட்டது. இதில், திருமணத்திற்கு வந்த கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த அக்கிம் என்பவர் பெயர் தேர்வாக அவருக்கு இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், திருமண விழாவிற்கு வந்த உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதுடன், மறக்கமுடியாத நினைவாக இருக்கும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.

First published:

Tags: Madurai, Marriage