Home /News /madurai /

புறம்போக்கு நிலத்தில் கோவிலை கட்டிக்கொண்டு மக்களை அனுமதிக்க மறுப்பதா - நீதிமன்றம் கேள்வி

புறம்போக்கு நிலத்தில் கோவிலை கட்டிக்கொண்டு மக்களை அனுமதிக்க மறுப்பதா - நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உலக நாடுகள் அதிவேகமாக முன்னேறி வரும் வேளையில்,  இங்கு கோவிலுக்குள்  அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு? - நீதிபதி வேதனை

அரசு புறம்போக்கு நிலத்தில் கோவிலை கட்டி வைத்து கொண்டு மக்களை அனுமதிக்க மறுப்பது ஏற்புடையது அல்ல கோவில் திருவிழாக்களில் அனைவரையும் அனுமதிக்க கோரி வழக்கில் நீதிமன்றம் கருத்து.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் கண்மாய்பட்டியில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ எங்கள் கிராமத்தில் மந்தையம்மன் கோவில், விநாயகர் கோவில் என இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டு கோயில்களும் அரசு புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.  எங்கள் கிராமத்தில் பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கின்றனர்.  இரண்டு கோவில்களிலும் நடக்கும் திருவிழாக்களில் முதலில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு நாங்கள் குடும்ப திருமணங்களை கோவிலில் நடத்தி வந்தோம்.

இந்த நிலையில் கடந்த , 2009 ஆம் ஆண்டில், கோவில் திருவிழாக்கள் கொண்டாடுவது தொடர்பாக இரண்டு சமூகத்தினரிடையே வகுப்புவாத கலவரங்கள் வெடித்தன. அமைதி பேச்சு வார்த்தைக்கு பின்,  புரட்டாசி மாதத்தில் "விநாயகர் கோவில்" திருவிழாவை ஒரு சமுதாய மக்கள் நடத்த ஒப்புக்கொண்டனர்.  அதேபோல், "வைகாசி / ஆடி மாத" "மந்தையம்மன் கோவில்" திருவிழாவை ஒரு சமுதாய மக்கள் நடத்த ஒப்புக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் மற்ற எல்லா நாட்களிலும் இரு கோயில்களின் அனைத்து திருவிழாக்களிலும் அனைவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் , கோயிலை எப்போதும் பொது மக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது .

இந்த நிலையில்,  ஒரு சமூகத்தினர் விநாயகர் கோயிலை தங்கள் சமூகத்துக்குச் சொந்தமான கோயில் எனக் கூறத் தொடங்கினர், மேலும் கோயில் வாசலில் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என எழுதி வைத்துள்ளனர்.  குறிப்பிட்ட சமூகம்.  கோவிலை பூட்டிவிட்டு , கோவிலுக்குள் உள்ள பொது கிணற்றை மூடிவிட்டு , கோவில் வளாகத்திற்குள் தங்கள் சமுதாயத் தலைவரின் சிலையையும்  அமைத்துள்ளனர் . பிற சமுதாயத் தினரை கோவிலுக்குள், அனுமதிக்க மறுகின்றனர்.

Also Read: தொழில் புரிய உகந்த மாநிலங்கள்.. தமிழகம் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து,  அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இரண்டு கோவில்களில் நாள்தோறும் வழிபாடு மற்றும் திருவிழாக்கள் நடத்துவதுடன் , கோவிலை அனைத்து தரப்பு  பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,  ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,  இன்றைய சூழலில் , உலக நாடுகள் அதிவேகமாக முன்னேறி வரும் வேளையில்,  இங்கு கோவிலுக்குள்  அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு? நாம் எந்த உலகத்தில் உள்ளோம்.  அரசியலமைப்பின் படி அனைவரும் சமம்.

அரசு புறம்போக்கு நிலத்தில் கோவிலை கட்டி வைத்து கொண்டு அனுமதி மறுப்பது ஏற்புடையது அல்ல.என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  மனுதாரரின் கோரிக்கை குறித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Madurai High Court, Tamil News, Temple

அடுத்த செய்தி