ஹோம் /நியூஸ் /மதுரை /

தமிழர்கள் அறிவு உள்ளவர்கள்... ஆனால் தைரியம் இல்லாதவர்கள் - சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

தமிழர்கள் அறிவு உள்ளவர்கள்... ஆனால் தைரியம் இல்லாதவர்கள் - சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

இந்திய ராணுவத்தினரை கொலை செய்த விடுதலை புலிகளுக்கு இங்கே சிகிச்சை அளிக்க கூடாது என சொன்னேன் ஆனால் அவர் கேட்கவில்லை. அப்படியென்றால் உங்கள் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைப்பேன் என கூறினேன்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madurai, India

  தமிழர்கள் அறிவு உள்ளவர்கள் ஆனால் தைரியம் இல்லாதவர்கள் எனவே புதிய தமிழர்களை உருவாக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.

  சுப்பிரமணியன் சுவாமியின் 83வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மதுரையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

  அதில், சுதந்திரம் பெற்ற பிறகு மெதுவாக இந்தியா சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளது எனவும் இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் வர போகிறது எனவும் தெரிவித்தார்.

  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம், திராவிடம் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என கேட்டேன். மேலும் உங்கள் பெயரும், உங்கள் கட்சி சின்னம் உதயசூரியனும் சமஸ்கிருத வார்த்தைகள் என கூறினேன் என்றார்.

  மேலும் ஆரியம் என்ற சொல் ஜெர்மெனியில் இருந்து வந்தது எனவும் இந்தியாவை பிளவுபடுத்தவே ஆங்கிலேயர்கள் ஆரியம் திராவிடம் என்ற பிரிவினையை கொண்டு வந்தனர். இந்த நாட்டை யாரும் பிரிக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானை நாம் பிரிப்போம்  என கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர், ஹிந்துவில் எந்த வேறுபாடும் கிடையாது எனவும் பிரமணர்களின் DNAவும் தாழ்த்தப்பட்டவர்களின் DNAவும் ஒன்று தான், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் கூட ஒரே DNA தான் ஏனென்றால் அவர்கள் இங்கிருந்து மதம் மாறிவர்கள் மட்டுமே என கூறினார்.

  ஆனால் தமிழர்களுக்கு தவறாக கற்று கொடுக்கப்படுகிறது. தமிழர்கள் அறிவு உள்ளவர்கள். ஆனால் தைரியம் இல்லாதவர்கள். எனவே ஒரு புதிய தமிழனை உருவாக்க வேண்டும் என கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர், 1991ல் கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய பெரும்பங்காற்றினேன்.  இந்திய ராணுவத்தினரை கொலை செய்த விடுதலை புலிகளுக்கு இங்கே சிகிச்சை அளிக்க கூடாது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் சொன்னேன் ஆனால் அவர் கேட்கவில்லை. அவர்கள் தமிழர்கள் அதனால் சிகிச்சை அளிப்போம் என கூறினார். அப்படியென்றால் உங்கள் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைப்பேன் என கூறினேன். அப்படி செய்தால் ரத்து ஆறு ஓடும் என சொன்னார். ஆனால் டிஸ்மிஸ் செய்த பிறகு அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

  இதையும் வாசிக்க: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது - மத்திய இணை அமைச்சர் வர்மா

  நம் சட்டபடி எந்த ஒரு அரசாங்கமும் கோவில் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. திமுகவினர் கடவுள் இல்லை என கூறுகின்றனர். பின் ஏன் கோவில் நிர்வாகத்தை கையில்  எடுக்க வேண்டும். இவர்கள் ஏன் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என சொல்கிறார்கள்.

  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தீர்ப்பு வந்ததும் கோயிலில் என்ன அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை அந்த கோயில் பூசாரிகள் தான் முடிவு செய்வார், கருணாநிதி அரசால் அதை தீர்மானிக்க முடியாது’ என கூறினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Dravidam, Subramanian Swamy, Tamil