Home /News /madurai /

மதுரை விமான நிலையத்துக்கு தேவையான இடத்தை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

மதுரை விமான நிலையத்துக்கு தேவையான இடத்தை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்கு 134 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜே.பி. நட்டா கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியதாகவும், அதற்காக 633 ஏக்கர் நிலத்தை கேட்ட நிலையில், 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே தமிழ் நாடு அரசு கொடுத்துள்ளதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

    மதுரை மற்றும் காரைக்குடியில் பாஜக சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். மலர் தூவி மேள, தாளங்கள் முழங்க ஜே.பி.நட்டாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் சமூக வளர்ச்சியிலும், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழில் துறையினர் ஆகியோரை மேம்படுத்துவதிலும் மோடி அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஜிப்மரில் தொடரும் மருந்து பற்றாக்குறை... கையிருப்பு மாத்திரைகளை மட்டும் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை...

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியதாகவும், அதற்காக 633 ஏக்கர் நிலத்தை கேட்ட நிலையில், 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே தமிழ் நாடு அரசு கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    தொடர்ந்து பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்கு 134 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மாணவர் சேர்க்கை இடங்கள் 100-லிருந்து 250-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: BJP, J.P.Nadda, Madurai

    அடுத்த செய்தி