Home /News /madurai /

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 'பே வார்டு' திட்டம்... கட்டண அடிப்படையில் சிகிச்சை பெறலாம்..

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 'பே வார்டு' திட்டம்... கட்டண அடிப்படையில் சிகிச்சை பெறலாம்..

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

Madurai | மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளை போல் நோயாளிகள் கட்டணம் அடிப்படையில் சிகிச்சை பெறுவதற்காக 'பே வார்டு'கள் அமைக்க 26 லட்ச ரூபாய் மதிப்பில் ஒப்பந்த பள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தென் தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியாரை போல் நோயாளிகளுக்கு கட்டணம் அடிப்படையில் சிகிச்சைப் பெறுவதற்கு 'பே வார்டு' திட்டத்தை செயல்படுத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

தென்தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘பே வார்டு’கள் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான சிவில் ஒர்க் தொடங்குவதற்கு தமிழக அரசு, மதுரை அரசு ராஜாஜி மருத்துமவனைக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியிருந்தது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 18 'பே வார்டுகள்' அமைக்கப்படுகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் கட்டிடத்தில் 10 வார்டுகளும், அண்ணா பஸ்நிலையம் அருகே உள்ள தலைக்காய அவசர அறுவை சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் 8 வார்டுகளும் அமைக்கப்படுகிறது.

Also see... போலி தங்க நகைகளை வைத்து ரூ.40 லட்சம் மோசடி.. கோவையில் தனியார் நிறுவன பெண் நிர்வாகி கைது...

முதல் கட்டமாக அவசர சிகிச்சை பிரிவுகள் உள்ள கட்டடத்தின் தரை தளத்தில் பே வார்டுகள் அமைப்பதற்காக பொதுப்பணி துறையின் சார்பாக சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டுமான பணிகளை நடத்துவதற்காக ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Rajaji Govt Hospital

அடுத்த செய்தி