ஹோம் /நியூஸ் /Madurai /

Madurai : தமிழகத்தின் 2வது தனியார் ரயில்.. மதுரையிலிருந்து இயக்கப்படுகிறது..!

Madurai : தமிழகத்தின் 2வது தனியார் ரயில்.. மதுரையிலிருந்து இயக்கப்படுகிறது..!

மதுரை டூ பிரயாக்ராஜ் ரயில்

மதுரை டூ பிரயாக்ராஜ் ரயில்

Madurai District : தமிழகத்தில் இரண்டாவது தனியார் ரயில் சேவையாக மதுரை நகரில் இருந்து சென்னை வழியாக பிரயாக்ராஜ் நகருக்கு புதிய ரயில் இயக்கப்பட உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையிலிருந்து , சீரடிக்கு இந்தியாவின் முதல் தனியார் ரயில் இயக்கப்பட்டது. அந்த வகையில்  இரண்டாவது தனியார் ரயில் மதுரையிலிருந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகருக்கு இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவிலுள்ள பாரம்பரியமான இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கவும் இந்த தனியார் ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்தியாவின் வளமான, கலாச்சார, பாரம்பரியம் மற்றும் வரலாற்று இடங்களை காட்சிப்படுத்துவதற்காக இந்திய ரயில்வே கடந்த நவம்பர் மாதம் 'பாரத் கவுரவ்' ரயில்கள் இயக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அந்த வகையில்  கோவை - சீரடி ரயிலை தொடர்ந்து தற்போது மதுரையில் இருந்து சென்னை வழியாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  மதுரையில் இருந்து பிரயாக்ராஜ் வரை செல்லும் இந்த சிறப்பு ரயிலுக்கான கட்டணம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில் சென்னை வழியாக விஜயவாடா, வாரணாசி, கொல்கத்தா, பூரி என 12 நாள் யாத்திரைக்கு பின்பு பிரயாக்ராஜ் சென்றடையும். அதேபோல் மறுநாள் பிரயாக்ராஜ் நகரில் இருந்து மதுரைக்கு கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

  கோவை - சீரடி ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது போல் மதுரை - மதுரை-பிரயாக்ராஜ் ரயிலுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  செய்தியாளர் - அருண் பிரசாத், மதுரை

  Published by:Arun
  First published:

  Tags: Madurai, Train