ஹோம் /நியூஸ் /மதுரை /

பள்ளி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் பயனுள்ளதாக இல்லை- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

பள்ளி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் பயனுள்ளதாக இல்லை- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Madurai | பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் தாக்கும் மனநிலையில் உள்ள மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி புகட்ட வேண்டியது அவசியம் என உயர் நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையை சேர்ந்த ராம்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 ஆம் ஆண்டு பொது நல வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால்,  பொருட்பால்  108 அதிகாரங்களை விளக்கத்துடன் சேர்க்க வேண்டும். ஆசிரியர்கள் முறையாக கற்பிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதில் இருந்து தேர்வுகளில் வினாக்கள் கேட்க வேண்டும் என  கூறி இருந்தார்.

இந்த பொது நல மனு நீதிபதிகள் R.மகாதேவன்,  J.சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், 2016 ஆம் ஆண்டு,  நீதிமன்ற உத்தரவின் படி,  2017 ஆம் ஆண்டு திருக்குறளை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க பள்ளி கல்வி துறை அரசாணை பிறப்பித்தது.

.மாணவர்களின் நலன் கருதி அறத்து பால்,  பொருட்பால் குறள்கள் 108 அதிகாரங்கள்,  1080 குறள்கள் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் பாட புத்தகங்களின் பிற சேர்க்கையில் சேர்க்கப்பட்டு உள்ளது. உரிய விளக்கம் இல்லை. காட்சி பொருளாகவே உள்ளது.  இதில் இருந்து தேர்வுகளின் போது வினாக்களும் கேட்பதில்லை.

எனவே,  நீதிமன்ற உத்தரவு படி, அறத்துபால்,  பொருட்பால் குறள்களை விளக்கத்துடன் சேர்க்க வேண்டும். ஆசிரியர்கள் இது குறித்து, மாணவர்களுக்கு விளக்கத்துடன் பாடம் நடத்த உத்தரவிட  வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யவில்லை. அரசாணை வெளியிட்டும் அதை ஏன் முழுமையாக அமல் படுத்தவில்லை? இன்றய சூழலில் ஒழுங்காக படிக்க வேண்டும்,  ஒழுக்கமாக இருக்க வேண்டும் என மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறினால் அவர்கள் மீது மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

இன்றைய சூழலில் பள்ளி மாணவர்களுக்கு, நல்ஒழுக்கத்தை,  நீதியை போதிக்க கூடிய கல்வி தேவை. அது திருக்குறளில் உள்ளது.

எனவே, அறத்துபால், பொருட்பால்  திருக்குறள்களை  உரிய விளக்கத்துடன் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் பாடத்தில் சேர்க்க வேண்டும். எனவே இந்த வழக்கை நீதிமன்றம் மிகவும் உன்னிப்பாக எடுக்க உள்ளது" என்றார்.

Also see... கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது

மேலும், “ 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவை முறையாக கடைபிடிக்காத,  அமல்படுத்தாத பள்ளிகள் மீது, பள்ளி கல்வி துறை செயலாளருக்கு சம்மன் அனுப்பி,  நாள் தோறும் வழக்கு விசாரணை நடத்த நேரிடும். தற்போது பள்ளித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இல்லை.

இதே நிலை நீடித்தால் பள்ளித் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் குழுவை கலைக்க வேண்டியது வரும். மனு தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai High Court