தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து மதுரையை சுற்றியுள்ள 6 அம்மன் கோவில்களில் சென்று தரிசிக்கும் விதமாக ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை , திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றலா 17.07.2022 அன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
மதுரை , ஓட்டல் தமிழ்நாடு , அழகர்கோயில் சாலையிலிருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் , மதுரை - அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், வண்டியூர் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் , மடப்புரம் - அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், விட்டனேரி- அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோவில், தாபமங்கலம் அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோவில், அழகர் கோவில், ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு அனைத்து கோவில்களிகலும் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ .900 / - நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Must Read : சிதம்பரம் நடராஜர் கோவில்: நகை சரிபார்ப்பு ஆய்விற்கு வருவதாக இந்து சமய அறநிலைத்துறை அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய தீட்சிதர்கள்
முன்பதிவு செய்ய
www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் 9176995841 , 044-25333333 , 044-25333444 ஆகிய எண்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.