ஹோம் /நியூஸ் /மதுரை /

ஒருசில அரசாங்கங்களுக்கு மனிதநேயம் இல்லை : அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஒருசில அரசாங்கங்களுக்கு மனிதநேயம் இல்லை : அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

Madurai News : சில அரசாங்கங்களுக்கு மனிதநேயம் இல்லை என மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சில அரசாங்கங்களுக்கு மனிதநேயம், செயல்திறன் இருப்பதில்லை என மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி உள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் மந்தை திடலில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்டடோர் உதவித்தொகை என 315 பயனாளிகளுக்கு 1 கோடியே 97 லட்சத்து 69 ஆயிரத்து 151 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

இந்த விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில். "முதல்வர் மற்றும் திமுக ஆட்சியின் அடையாளம் மனிதநேயம் மற்றும் செயல்திறன். எல்லோருக்கும் எல்லாம் எனும் கொள்கையின் படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : மாண்டஸ் புயல் எதிரொலி.. 6 மாவட்டங்களில் பேருந்து சேவை ரத்து!

அரசு நலத்திட்டங்களை தீட்டினாலும் அதனை செயல்படுத்துவது அரசாங்க அதிகாரிகள், அரசு நலத்திட்டங்கள் கடைசி பயனாளி வரை சென்று சேர செயல்திறன் உருவாக்க வேண்டும்.

ஒரு சில அரசாங்கங்களுக்கு மனித நேயம் இருந்தால் செயல்திறன் இருப்பதில்லை. ஒரு சில அரசாங்கங்களுக்கு செயல்திறன் இருந்தால் மனித நேயம் இருப்பதில்லை. தமிழக அரசு மனிதநேயம், செயல்திறனுடன் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

நிதியமைச்சராக நான் செயல்படுவது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது மிக முக்கியம். 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்திருக்க முடியாது. என்னை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்த தொகுதி மக்களுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டவனாக செயல்படுவேன்" என பேசினார்.

செய்தியாளர் : வெற்றி - மதுரை

First published:

Tags: Madurai, Minister Palanivel Thiagarajan, Tamilnadu