Home /News /madurai /

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு.. மதுரையில் பரபரப்பு!

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு.. மதுரையில் பரபரப்பு!

அமைச்சர் கார் மீது தாக்குதல்

அமைச்சர் கார் மீது தாக்குதல்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் பாஜகவினர் செருப்பு வீசியதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் இரு நாள்களுக்கு முன்னர் வீரமரணம் அடைந்தார். உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு இன்று வந்தது.வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு தொடங்க இருந்த நிலையில், அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு பாஜக மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் 50 பாஜகவினர் குவிந்தனர்.

    நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திய பின்னர் தான் பாஜகவின் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதாகவும், இதனால் அங்கிருந்த பாஜகவினர் ஆத்திரமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: இலவச பேருந்து திட்டம் பொருளாதார புரட்சி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    தொடர்ந்து ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற நிலையில், அவர் காரை பாஜகவின் வழி மறித்து கோஷம் எழுப்பினர். அத்துடன் அவர் கார் மீது சிலர் செருப்புகளை வீசியுள்ளனர்.

    சலசலப்பில் ஈடுபட்ட நபர்களை விரைந்து காவலர்கள் அப்புறப்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
    Published by:Kannan V
    First published:

    Tags: BJP, Madurai, Minister Palanivel Thiagarajan

    அடுத்த செய்தி