ஹோம் /நியூஸ் /மதுரை /

கோவிலுக்குள் வணிக நோக்கத்தில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

கோவிலுக்குள் வணிக நோக்கத்தில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

High Court Madurai Bench | தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி பகுதியில் ஸ்ரீசங்கரராமேஸ்வரர் ஆலயம் மற்றும் வைகுண்டபதி திருக்கோவிலின் பிரகாரத்தில் புஷ்ப கடை, பிரசாத ஸ்டால் வைப்பதற்கு விடப்பட்ட ஏல அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

கோவிலுக்குள்  வணிக நோக்கத்தில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியை  சேர்ந்த வசந்தகுமார் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில்  தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி பகுதியில் ஸ்ரீசங்கரராமேஸ்வரர் ஆலயம் மற்றும்  வைகுண்டபதி திருக்கோவில் ஆகிய பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயங்கள் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதனமிக்க ஆலயமாக உள்ளது.

இந்த கோவில்களில் பழங்காலத்தில் இருந்தே பூ விற்கவோ அல்லது பிரசாதம் விற்கவோ எந்த கடையும் இல்லை. ஆனால், தற்போது பூக்கடைகள் மற்றும் பிரசாத விற்பனை கடைகள் நடத்துவதற்கு கோவிலின் செயல் அலுவலர் டெண்டர் நடத்தி கோயில் பிராகரத்தில்  கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதையும் படிங்க : மீன்பிடிப்பதில் தகராறு... கணவன், மனைவி சரமாரி வெட்டி படுகொலை... மதுரை அருகே பரபரப்பு

இது முற்றிலும் கோவிலின் பழமையான பழக்கவழக்கங்களுக்கு எதிரானது. சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலை பொறுத்தவரை நுழைவாயிலின் மொத்த அகலம் 20 அடி மட்டுமே இருந்த நிலையில் கோவிலின் வளாகத்திற்குள் கடைகள் செயல்படுவதால் பக்தர்கள் கோவிலின் உள்ளே சென்றுவர மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு பழமை வாய்ந்த சிற்பங்கள் இதனால் மறைக்கப்படுகிறது. இது மட்டுமன்றி கோயிலின் நுழைவாயிலின் சில பகுதியை கூட அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.  இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

எனவே, தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி பகுதியில் ஸ்ரீசங்கரராமேஸ்வரர் ஆலயம் மற்றும் வைகுண்டபதி திருக்கோவிலின் பிரகாரத்தில் புஷ்ப கடை, பிரசாத ஸ்டால் வைப்பதற்கு விடப்பட்ட ஏல அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : செய்தியாளர்களை ஒருமையில் பேசிய அண்ணாமலை... சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

இந்த மனு நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில் பிரகாரத்தினுள் வணிக நோக்கத்தில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்து  பூக்கடைகளை கோவிலின் வெளியே அமைப்பது குறித்து சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  ஒத்திவைத்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: High court, Madurai