Home /News /madurai /

மதுரையில் திருமணமான இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்.. குடும்பமாய் திட்டமிட்டு கொன்றது அம்பலம்..

மதுரையில் திருமணமான இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்.. குடும்பமாய் திட்டமிட்டு கொன்றது அம்பலம்..

கைதான கணவர் அர்சுணனன்,அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்

கைதான கணவர் அர்சுணனன்,அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்

Crime News | திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சந்தேகித்து குடும்பத்துடன் திட்டமிட்டு பெண்ணை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது

    மதுரை மேலூரில் திருமணமான இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் உட்பட உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி செல்லும் சாலையில் குன்றக்குடி ஆதின மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் கடந்த 29ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    சம்பவ இடத்தில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரகாஷ், மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் தடயஅறிவியல், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்த பெண் திண்டுக்கல் மாவட்டம் பஞ்சயம்பட்டியை சேர்ந்த அர்சுணன் மனைவி ராசாத்தி (18) என்பதும், இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளதும் தெரியவந்தது.
    ராசாத்தியின் கணவர் அர்சுணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அர்சுணனுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்று விட்ட நிலையில், மூன்றாவதாக உறவினரின் மகளான ராசத்தியை ஒன்றரை வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், இருவரும் தங்கள் குழந்தையுடன் சென்னையில் தங்கி இடியாப்ப கடை நடத்தி வந்துள்ளனர்.

    Also Read : குடிபோதையில் இரண்டாவது மனைவியை எப்படி கொலை செய்தோம் என மறந்த கணவன்.. ஆறு, கிணறு என 3 நாள்கள் போலீசாரை அலைக்கழிப்பு


    சென்னையில் ராசத்திக்கு சிலருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சந்தேகித்து, அதனை கணவர் அர்சுணனன் கண்டித்ததாகவும், இதுகுறித்து அர்ச்சுனன் தனது தந்தை ராசு, தாய் அரியம்மாள், உறவினர்கள் வல்லான் என்ற ரவி மற்றும் சிவலிங்கம் ஆகியோருக்கு தகவல் அளித்துவிட்டு ராசத்தியை ஊருக்கு அழைத்து வந்து கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

    இதன்படி கடந்த 28ம் தேதி இரவு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று கூறி அர்சுனன், தனது மனைவி ராசாத்தி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு மேலூர் அருகே பொட்டப்பட்டி பிரிவு நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே வந்துள்ளார். அங்கே காத்திருந்த ராசு மற்றும் அரியம்மாள் ஆகியோர் அவர்களை அழைத்து கொண்டு அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்றுள்ளனர்.

    அங்கே வைத்து ராசத்தியை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார் அர்ச்சுனன். ராசாத்தி தடுத்த நிலையில், பாட்டிலால் மேற்கொண்டு குத்தியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து பனை ஓலைகளை வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று உறவினர்களான சிவலிங்கம் மற்றும் வல்லான் என்ற ரவி வீடுகளில் சென்று பதுங்கி இருந்துள்ளதாக அர்சுணனன் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் அர்சுணனன், அவரது பெற்றோர் ராசு, அரியம்மாள், உறவினர்களான வல்லான் என்ற ரவி மற்றும் சிவலிங்கம் ஆகிய 5 பேரை கொட்டாம்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Crime News, Madurai, Murder case

    அடுத்த செய்தி