ஹோம் /நியூஸ் /மதுரை /

அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துனர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துனர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

ஆட்டு தாவணி பேருந்து நிலையம்

ஆட்டு தாவணி பேருந்து நிலையம்

Madurai | மதுரையில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை ஆரப்பாளையம் செட்டியார் லையன் குடியிருப்பில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் தினமும்  மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் இடையே இயங்கக்கூடிய பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

  கூடல் நகர் சொக்கலிங்க நகர் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் அந்த பேருந்தில் நடத்துனராக இருந்து வரக்கூடிய நிலையில் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகின்றது.

  ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி தனக்கு நடந்ததை தன்னுடைய அண்ணனிடம் பகிர்ந்த நிலையில், அவர் அந்த நடத்துனரை நேரில் சென்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  Also see... பைக், ஆடு திருடும் கும்பலை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

  நடத்துனர் பேருந்திலேயே தன்னுடைய அண்ணனை மிரட்டிய நிலையில் கல்லூரி மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்துறையினர் ( தெற்கு) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Madurai, Pocso, Sexual harassment