ஹோம் /நியூஸ் /மதுரை /

`தமிழ்நாடு திராவிட பூமி, இங்கு திராவிட இயக்கம் மட்டும் தான் ஆட்சியமைக்க முடியும்’ - செல்லூர் ராஜு அதிரடி!

`தமிழ்நாடு திராவிட பூமி, இங்கு திராவிட இயக்கம் மட்டும் தான் ஆட்சியமைக்க முடியும்’ - செல்லூர் ராஜு அதிரடி!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

பாஜக வளர்ந்து விட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி கருத்து.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai | Madurai

  தமிழ்நாடு திராவிட பூமி, இங்கு திராவிட இயக்கம் மட்டும் தான் ஆட்சி அமைக்க முடியும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

  மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பாலம் மற்றும் பயணியர் நிழற்குடை ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக வளர்ந்து விட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் பயந்து விட்டார் என நினைக்கிறேன். அவரிடம் ஏற்கனவே ரெய்டு நடந்துள்ளது. துறை ரீதியான சில புகார்களும் உள்ளன எனவே அவர் அப்படி சொல்லி இருக்கலாம். அதிமுகவை பொறுத்த வரை தமிழ்நாடு திராவிட பூமி. இங்கு திராவிட இயக்கம் மட்டும் தான் ஆட்சி அமைக்க முடியும் என தெரிவித்தார்.

  திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் சேர வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கருத்து குறித்த கேள்விக்கு,

  ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் இப்போது ஒன்றாக தான் உள்ளோம். அதிமுகவில் பிளவு ஏற்படுவதும் பின்பு மீண்டும் பிரிந்தவர்கள் இணைவதும் வழக்கம் தான். எனவே பிரிந்து சென்றவர்கள் உரிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வேண்டும். அப்போது தான் விடிவுகாலம் கிடைக்கும். எதிர்காலத்தில் எதுவும் எப்படியும் மாறலாம் என குறிப்பிட்டார்.

  செய்தியாளர்: வெற்றி, மதுரை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Madurai, Sellur K. Raju, Sellur Raju, Sellur Raju Speech