Home /News /madurai /

மதுரைக்கு நிதியமைச்சர் பிடிஆர் ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை.. செல்லூர் ராஜு குற்றச்சாட்டு

மதுரைக்கு நிதியமைச்சர் பிடிஆர் ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை.. செல்லூர் ராஜு குற்றச்சாட்டு

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

ஒன்றிய அரசு என ஒலிக்கும் திமுக, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில்  பிரதமர் கலந்து கொண்ட பொழுது, ஒன்றிய பிரதமர் என்று சொல்லாமல் இந்திய பிரதமர் என்று முதலமைச்சர் கூறுகிறார், ஏனென்றால் பிரதமரை பார்த்து திமுக அரசுக்கு பயம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரையில் திமுக, பாஜக, அமமுகவிலிருந்து விலகி  மாற்றுகட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஆளுங்கட்சியின் செயல்பாடு சரியில்லை என்பதால் தான் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்துள்ளனர், அதிமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை மக்களுக்கு  நிறைவேற்றியது, ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்காக பொய்யான பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து ஏமாற்றி உள்ளது” என குற்றம்சாட்டினார்.

மேலும், “எங்கள் ஆட்சியில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கடந்த 2016 ஆண்டு முதல் 6 முறை 142 அடியாக உயர்த்தினோம், கேரள அரசு அப்போது எந்த விதமான நெருக்கடியும் கொடுக்க வில்லை. அண்டை மாநிலங்கள் கொடுக்கும் நெருக்கடியை திமுக அரசு சமாளிக்க முடியவில்லை, ரூல்கர்வ் முறையால் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒன்றிய அரசு என ஒலிக்கும் திமுக, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில்  பிரதமர் கலந்து கொண்ட பொழுது, ஒன்றிய பிரதமர் என்று சொல்லாமல் இந்திய பிரதமர் என்று முதலமைச்சர் கூறுகிறார், ஏனென்றால் பிரதமரை பார்த்து திமுக அரசுக்கு பயம். இலவச மகளிர் பயணத்தில் 8 கோடி பேர் பயனடைந்துள்ளதாக அதன் முதன்மை செயலாளர் கூறுகிறார், ஆனால் அதை எப்படி கணக்கு எடுத்தார்கள் என தெரியவில்லை,

கமிஷன் வாங்குவதில் மட்டுமே நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியாக இருப்பதாக திமுக நிர்வாகிகளே புலம்புகின்றனர், மதுரைக்கு நிதியமைச்சர் ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை, மதுரைக்கு ஒரு அறிவு ஜிவியாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
Published by:Raj Kumar
First published:

Tags: DMK, Minister Palanivel Thiagarajan, Sellur Raju

அடுத்த செய்தி