ஹோம் /நியூஸ் /மதுரை /

"தில்லிருந்தா மாட்ட பிடிச்சு பாரு"- மதுரையில் சிறுவர்கள் நடத்திய மினி ஜல்லிக்கட்டு..!

"தில்லிருந்தா மாட்ட பிடிச்சு பாரு"- மதுரையில் சிறுவர்கள் நடத்திய மினி ஜல்லிக்கட்டு..!

மதுரை மினி ஜல்லிக்கட்டு

மதுரை மினி ஜல்லிக்கட்டு

Madurai mini jallikattu | அலங்காநல்லூரில் நடைபெறும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வை மாணவர்கள் சிறிய அளவில் நடத்தி களிமண்ணால் ஆன காளைகளை ஓட செய்து அசத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai | Alanganallur

மதுரை அலங்காநல்லூர் அருகே களிமண் காளைகளை வைத்து பள்ளி சிறுவர்கள் நடத்திய "மினி ஜல்லிக்கட்டு" வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக சிறுவர்கள் செய்த செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன் குளம் கிராமத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்கள், களிமண்ணால் ஜல்லிக்கட்டு களம் செய்து வாடிவாசல் அமைத்துள்ளனர். அந்த வழியாக காளைகளை கைகளால் ஓடி வரவைத்து விளையாடினர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

அதில்,  பள்ளி சிறுவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தை அப்படியே களிமண்ணால் செய்து அதில் வாடிவாசல் அமைத்து, அதன் வழியாக காளைகள் ஓடி வரவைத்து விளையாடினார். மாட்ட பிடி தங்க காசு பரிசு என கூவி கூவி அவர்களே மாட்டை ஓடவிட்டு இலக்கை அடைய செய்த வீடியோ காட்சிகள் காண்போரை கவர்ந்து வருகிறது.

பள்ளி அரையாண்டு விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இந்த கிராமத்து சிறுவர்கள் ஜல்லிக்கட்டு திருவிழாவை களிமண்ணால் செய்து விளையாடிய இந்த காட்சி பரவலாக பகிரப்பட்டும், பாரட்டப்பட்டும் வருகிறது.

First published:

Tags: Alanganallur, Jallikattu, Local News, Madurai