Home /News /madurai /

ஸ்டாலின் அய்யா உணவு நல்லா இருக்கானு கேட்டாரு.. நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட மாணவி!

ஸ்டாலின் அய்யா உணவு நல்லா இருக்கானு கேட்டாரு.. நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட மாணவி!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

102 ஆண்டுகளுக்கு முன், நீதிகட்சி தலைவரான பிட்டி தியாகராயர், சென்னையில் தொடங்கிய மதிய உணவு திட்டம், இன்று மதுரையில் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    காலை உணவு திட்டத்தில் முதலமைச்சர் ஊட்டிவிட்ட சிறுமி நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் உடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழக்கும் திட்டத்தை இன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள 417 மாநகராட்சி பள்ளிகள், 163 நகராட்சி பள்ளிகள், 728 கிராம ஊராட்சி பள்ளிகள், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகள் என 1,545 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

    இதையும் வாசிக்க: TN Breakfast: தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகும் தமிழகத்தின் காலை சிற்றுண்டி திட்டம்

    இந்நிலையில் இன்று காலை இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார், அங்கிருந்த குழந்தைகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்ட அவர், அருகில் இருந்த சிறுமிக்கு உணவை ஊட்டிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



    இது குறித்து பேசிய அவர், பள்ளிக்கு பசியோடு படிக்க வரும் மாணவர்களுக்கு முதலில் உணவு வழங்கிவிட்டு பின் வகுப்பறைக்கு செல்ல கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளோம். இது தனது வாழ்வின் பொன்னாள் என கூறினார். மேலும், 102 ஆண்டுகளுக்கு முன், நீதிகட்சி தலைவரான பிட்டி தியாகராயர், சென்னையில் தொடங்கிய மதிய உணவு திட்டம், இன்று மதுரையில் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் முதலமைச்சர் ஊட்டிவிட்ட சிறுமி, நியூஸ் 18 தமிழ்நாடு-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “கேசரியும் சாம்பாரும் குடுத்தாங்க நல்லா இருந்துச்சு.. ஊட்டிவிட்டதுக்கு அப்பறம் ஸ்டாலின் அய்யா நல்லா இருக்கியானு கேட்டாரு.. ” என கூறினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Madurai, Tamilnadu

    அடுத்த செய்தி