Home /News /madurai /

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான சவுக்கு சங்கர்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான சவுக்கு சங்கர்...

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

Savukku Sankar | நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில்,  யூடியூபர் சவுக்கு சங்கர்,  உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜரானார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
முழு நீதித்துறையும் ஊழலில் சிக்கியுள்ளது என யூடியூப் சேனலுக்கு  நீதித்துறை குறித்து அவதூறாக பேட்டி கொடுத்த சவுக்கு சங்கருக்கு எதிராக ,  கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஏன் தொடங்கக்கூடாது? என்பது குறித்த வழக்கை செப்டம்ப ர் 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

உயர்நீதிமன்ற   நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து,  அவதூறாக ட்விட்  செய்ததாக,  சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை , தாமாக முன் வந்து,  SUOMOTO-.வாக  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி, பதிவாளருக்கு கடந்த ஜூலை  19 ம் தேதி பரிந்துரைத்தார்.

இந்த நிலையில் அதற்கு பிறகு ஜூலை 22 ம் தேதி ( 22.07.2022) அன்று ரெட் பிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்தார். அதில்,   "முழு  நீதித்துறையும் ஊழலில் சிக்கியுள்ளது" என பேட்டி கொடுத்து இருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு  நடவடிக்கை கோரிய வழக்கு கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி  நீதிபதிகள் G.R.சுவாமிநாதன்,  B.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் 22.07.2022 அன்று ரெட் பிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக அரசு ஊழியர் சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில்,   "முழு உயர் நீதித்துறையும் ஊழலில் சிக்கியுள்ளது" என தெரிவித்துள்ளார்

இவ்வாறு நீதிதுறை குறித்து அவதூறாக பேட்டி கொடுத்த சவுக்கு சங்கருக்கு எதிராக , கிரிமினல் அவமதிப்பு வழக்கு  ஏன் தொடங்கக்கூடாது ?  என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து, சவுக்கு சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு  நேற்று நீதிபதிகள் G.R.சுவாமி நாதன், B.புகழேந்தி அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.

நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில்,  யூடியூபர் சவுக்கு சங்கர்,  உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் நேரில் ஆஜராகினார். அப்போது நீதிபதி, என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார். அப்போது சவுக்கு சங்கர், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். மேலும் , இந்த சூழலில் எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன் வர மாட்டார்கள்.  இந்த வழக்கில் நானே ஆஜராகிறேன். வழக்கறிஞர் தேவையில்லை என கூறினார்.

அப்போது நீதிபதிகள்,  நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில், உங்கள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்க  கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். அப்போது, சவுக்கு சங்கர் கூறுகையில், நான் பேசியதை மறுக்கவில்லை. எனக்கு அந்த வீடியோ வேண்டும் அல்லது அது குறித்த பதிவு செய்யப்பட்ட நகல் வேண்டும் என வாதிட்டார். நீதித்துறை மூலமாக உங்களுக்கு வழக்கறிஞர் ஏற்பாடு செய்யவா?  என நீதிபதிகள் கேட்டனர்.

Also see... முதலவர் மு.க ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் பெயர் கூறவும் பரிந்துரைக்கிறோம் என கேட்டனர். அப்போது, எனக்கு மூத்த வழக்கறிஞர் N.R.இளங்கோவை ஏற்பாடு செய்ய இயலுமா என வினவினார். மேலும் நான் 10ம் வகுப்பு வரை தான் படித்து உள்ளேன். அரசு பணியில் இருந்தேன். தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளேன்.  பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வாதிட்டார். இதை தொடர்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Madurai, Madurai High Court, Savukku Shankar, Youtube

அடுத்த செய்தி