Home /News /madurai /

மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு உயிர்காக்கும் கருவி… மதுரை பொறியாளர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு

மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு உயிர்காக்கும் கருவி… மதுரை பொறியாளர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு

ஆப் செயல்படுவதை விளக்கும் பொறியாளர் செந்தில்.

ஆப் செயல்படுவதை விளக்கும் பொறியாளர் செந்தில்.

மலைவாழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு உயிர்காக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் மதுரையைச் சேர்ந்த பொறியாளர்கள் இருவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மலை வாழ் பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் நீண்ட தூரம் நடந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வதில்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக மதுரையைச் சேர்ந்த தினேஷ் மற்றும் செந்தில் ஆகியோர் மலைக் கிராமங்களில் வாழும் கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வகையில் "Save Mom" என்ற புதிய செயலியை கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த ஒரு சிறிய கருவி மூலம் மலைவாழ் கர்ப்பிணிகளை அவர்கள் இருக்கும் இடத்தில் வைத்தே மருத்துவர்கள் கண்காணிக்க முடியும்.  "Allo Wear" என்றழைக்கப்படும் புளூடூத் இணைக்கப்பட்ட கயிறை பிரசவக் காலங்களில் கர்ப்பிணிகள் கையிலோ அல்லது கழுத்திலோ முதலில் அணிய வேண்டும். பிறகு மாதம் ஒரு முறை வீட்டில் இருந்தபடியே கர்ப்பிணிகள் அங்கிருக்கும் சுகாதார செவிலியர்கள் உதவியுடன்  " Allo Tricoder" மற்றும் "Allo BMI  என்ற கருவியின்  மூலம் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, சர்க்கரை அளவு உள்ளிட்ட 10 விதமான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு செய்வதன் மூலம், கர்ப்பிணிகள் நேரடியாக மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் தங்களது உடல்நிலை குறித்து வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ள முடியும்.

    இந்தக் கருவியின் மூலம், கர்ப்பிணிகள் மேற்கொண்ட பரிசோதனையின் முடிவுகளை "Save Mom" என்ற செயலி மூலம் மருத்துவர்கள் அறிந்துகொண்டு அறிவுரையும் வழங்க முடியும். அதே போல, பிரசவத்திற்கான நேரத்தின் பொழுது கர்ப்பிணிகளுக்கு அலர்ட் செய்ய முடியும்.



    இதனால், கர்ப்பிணிகள் அலைச்சலின்றி மருத்துவ உதவிகளை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். "தேசிய சுகாதார இயக்கத்தின் ஒத்துழைப்புடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 36 ஆயிரம் மலை கிராம கர்ப்பிணிகளை கண்காணித்து பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல அலர்ட் செய்யப்பட்டுள்ளதாக செயலியை உருவாக்கிய செந்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம் பாய்ச்சியவர் அதே மின்சாரம் தாக்கி பலி - சோக சம்பவம்

    100 சதவீதம் உயிரிழப்பு இல்லாத பிரசவம் என்ற நோக்கத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கருவியை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல எடுத்துவரும் இவர்களின் முயற்சி பாராட்டுக்குறியது.

    இதுகுறித்து செந்தில் கூறும்பொழுது, "தேசிய சுகாதார இயக்கத்தின் ஒத்துழைப்புடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 36,000 மலை கிராம கர்ப்பிணிகளை கண்காணித்து பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல "அலர்ட்" செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மலை கிராமங்களில் வாழும் கர்ப்பிணிகளுக்கு இந்த கருவியை கொடுத்து கண்காணித்து வருகிறோம், தமிழகம் முழுவதும் சென்று இந்த கருவிகளை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.

    செய்தியாளர் : ஹரி கிருஷ்ணன், மதுரை
    Published by:Musthak
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி