ஹோம் /நியூஸ் /மதுரை /

புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..

புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..

மதுரை மல்லி

மதுரை மல்லி

Madurai News : மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு மல்லி ரூபாய் 1800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையின் தனி சிறப்புகளில் ஒன்று தான் மதுரை மல்லி. மதுரை மல்லியின் மனம் மற்றும் தன்மை ஆகியவற்றின் காரணமாகத்தான் மதுரை மல்லிகென உலக அளவில் தனி மவுசு உள்ளது.

மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள இப்பூச்சந்தையில் தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் விளையும் மதுரை மல்லியும் கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இறக்குமதியை செய்யப்படும் பூக்களும் இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டு மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி மதுரை மல்லி ரூபாய் 1800 முதல் 1500 வரையும், பிச்சு மற்றும் முல்லை ரூபாய் 1300க்கும், பட்ரோஸ் ரூபாய் 220க்கும, அரளி ருபாய் 300க்கும், செண்டுமல்லி ரூபாய் 100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மற்ற பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

செய்தியாளர் : யுவதிகா - மதுரை

First published:

Tags: Local News, Madurai, New Year 2023