ஹோம் /நியூஸ் /மதுரை /

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2023: "காளைக்கு 8 வயது இருக்க வேண்டும்" அடுக்கடுக்கான ரூல்ஸ்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2023: "காளைக்கு 8 வயது இருக்க வேண்டும்" அடுக்கடுக்கான ரூல்ஸ்..!

ஜல்லிகட்டு

ஜல்லிகட்டு

Madurai alanganallur jallikattu | 17ஆம் தேதி நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் என்ன செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Alanganallur

அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், காளை உரிமையாளர்களும், மாடு பிடி வீரர்களும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதலின் படியும் ஜல்லிகட்டு விழா நடைபெறும்.
காளைகள் 8 வயதுடையதாக இருக்க வேண்டும்.
நாட்டு இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி.
மாடுபிடி வீரர்கள் 21 முதல் 41 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பரிசு பொருட்கள் கொடுக்கும் உபயதாரர்கள் விழா கமிட்டியிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். தனி நபரிடம் ஒப்படைக்க கூடாது.
கட்சி பேனர்கள் வைக்க அனுமதி கிடையாது.
காளைகள் டோக்கன் வரிசைப்படி மட்டுமே அவிழ்க்கப்படும்.
போலி டோக்கம் மூலம் வந்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
காளைகளை காவல்துறையினர் அழைத்த பின்பு வரிசைப்படி வரவேண்டும்.
காலை 5 மணிக்கு மேல் தான் காளைகளை ஊருக்குள் கொண்டு வர வேண்டும்.
காளைகளும், மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்து இருக்கவேண்டும்.
First published:

Tags: Alanganallur, Jallikattu, Local News, Madurai