ஹோம் /நியூஸ் /மதுரை /

போலீஸ் இன்ஸ்பெக்டரை குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி.. மதுரையில் பரபரப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டரை குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி.. மதுரையில் பரபரப்பு

கைதான ரவுடி

கைதான ரவுடி

Crime News : மதுரையில் காவல்துறை சார்பு ஆய்வாளரை பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான கூல்மணி (எ) மணிகண்டன் (30) என்பவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தெப்பக்குளம் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய அழகுமுத்து என்பவர் கூல்மணி மீது கொள்ளை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். பின்னர், சில வாரங்களுக்கு முன் அழகுமுத்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாலை அவர் சக காவலர்களுடன் மதுரை  மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை மடக்கியபோது காரினுள் இருந்தது பிரபல ரவுடி கூல்மணி என்பது தெரியவந்தது. அழகுமுத்து அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் சார்பு ஆய்வாளர் அழகுமுத்துவை வெட்ட கூல்மணி முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விரட்டியுள்ளனர்.

பின்னர், காரிலிருந்து இறங்கி ஓடிக்கொண்டே காவல்துறையினர் மீது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினார்.  இந்த குற்றச்சம்பவம் குறித்து பிரபல ரவுடி கூல்மணி மீது எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூல்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Crime News, Local News, Madurai