Home /News /madurai /

திமுக பிரமுகர் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொலை.. மதுரையில் அதிர்ச்சி

திமுக பிரமுகர் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொலை.. மதுரையில் அதிர்ச்சி

திமுக பிரமுகர் கொலை

திமுக பிரமுகர் கொலை

Madurai : மதுரை திருமங்கலம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திமுக பிரமுகரின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், கொலை சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     திருமங்கலத்தில்  25 வயது வாலிபர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் விவசாய கிணற்றிலிருந்து உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. கொலை சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரது மகன் பாலாஜி (25), தி.மு.க பிரமுகரான இவர்  எல்.எல்.பி. பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் மனைவி தர்ஷினி. இவர்களுக்கு  திருமணமாகி ஒன்றை ஆண்டுகள் ஆகின்றன.

    தர்ஷினிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. குழந்தை பிறந்ததால் தர்ஷினி கோவில்பட்டியில் உள்ள தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி   வீட்டை விட்டு வெளியில் சென்ற பாலாஜி வீடு திரும்பவில்லை. அதனால் அவரது பெற்றோர்கள் மனைவியை பார்க்க சென்று இருக்கலாம் என நினைத்து விட்டு அமைதியாக இருந்துள்ளனர்.

    இந்நிலையில், எம். சுப்புலாபுரம் அருகே சிட்டுலொட்டிபட்டி பகுதியில் சாமிராஜ் என்பவரது விவசாய கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காடனேரி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன்  போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து வந்த பேரையூர் போலீசார் சம்பவ இடத்தில் வந்து கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடம்பு முழுவதும் சாக்கால் போர்த்தி இருந்தது. சாக்கை அகற்றி பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற திமுக பிரமுகர் பாலாஜிதான் அது என்பது தெரியவந்தது.

    Must Read : ‘நாடோடிகள்’ பட பாணியில் நடிகர் அஜித்துக்கு போஸ்டர்! - திருச்சி ரசிகர்கள் வெறித்தனம்.. பொதுமக்கள் வியப்பு

    இதனை அடுத்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்த போலீசார், இறந்த பாலாஜியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாலிபர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் கொலை வழக்காக பதிவு செய்தனர். பாலாஜியை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக கொலை செய்தனர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Madurai, Murder, Youth dead

    அடுத்த செய்தி