Home /News /madurai /

போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் - அமைச்சர் மூர்த்தி

போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் - அமைச்சர் மூர்த்தி

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி

Madurai | போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரமளிக்கும் சட்டம் ஒரு வாரத்தில் அமலுக்கு வரும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கு கொண்டனர். பத்திரப்பதிவு செய்வதில் காலதாமதம் ஆவதாக மக்களிடம் இருந்து புகார் எழுந்த நிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வுக்கு பின்னர் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சில நாட்களாக பதிவுத்துறை இணையம் தொய்வாக உள்ளதாக செய்தி வந்தது. இதனையடுத்து பதிவுத்துறை அலுவலகத்தில் நேரில் ஆய்வு செய்தோம். ஒரு பத்திரத்தை பதிவு செய்ய 10 லிருந்து 15 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. பொது மக்கள் காலதாமதம் இன்றி பத்திரப்பதிவு செய்யலாம்.

ஒரு வார காலத்திற்கு உள்ளாக போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் சட்டம் அமலுக்கு வர உள்ளது. எந்த கால கட்டத்தில் போலி பத்திரம் பதிவு செய்திருந்தாலும் அப்பத்திரம் ரத்து செய்யப்படும்.

Also see... சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்க போகிறதா? காலநிலை மாற்ற திட்ட வரை அறிக்கை அதிர்ச்சி தகவல்

பத்திரப்பதிவு வருவாய் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10 லட்சத்து 92 ஆயிரம் பத்திரப்பதிவினால் 5,440 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில் தற்போது வரை 16 லட்சம் பத்திரப்பதினால் 7,362 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. பதிவுத்துறையில் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளால் வருவாய் அதிகரித்துள்ளது" என கூறினார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி