Home /News /madurai /

ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டம் நிறுத்தப்படுகிறதா? அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்

ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டம் நிறுத்தப்படுகிறதா? அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்

ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

 தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து  தற்போது நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் - அமைச்சர் ஐ.பெரியசாமி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கும் திட்டம் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் பரவிவரும் நிலையில் இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

    கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசின்  பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டத்தின்கீழ் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில்  செப்டம்பர் மாதத்திற்கு பின் இத்திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ரேஷனில் வழங்கப்படும் இலவச அரிசி நிறுத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது. இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து  தற்போது நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இந்தத் திட்டங்களால் மதுரை முகமே தற்போது மாறி உள்ளது.

    தொடர்ந்து 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களை எல்லாம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளோம். டெல்லியில் நடைமுறையில் உள்ள உயர்தர கல்வித் திட்டத்தை தமிழகத்தில் ஏழைகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக தமிழக அரசு தமிழகத்தில் பல இடங்களில் ஆரம்பிக்கிறோம்.

    இதையும் படிங்க: நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வேண்டும்..! நீங்க சொன்னதுதான் - முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

    மத்திய அரசின் அறிவிப்பால் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை. கடத்தலின்போது பறிமுதல் செய்யப்படும் ரேஷன் அரிசியை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Free Rice, Minister, Ration

    அடுத்த செய்தி