மதுரையில் நேற்று மாலை தொடங்கிய மழையால் வெயில். மறைந்து இருள் சூழ்ந்து, குளிர்ந்த நிலையிலும் ஊரெங்கும் வெள்ளநீர் தேங்கியது.
மதுரையில் கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது.
மதுரையில் நேற்று(16/06/2022) மாலை 6 மணி அளவில் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னல் இன்றி திடீரென பெருமழை கொட்ட தொடங்கியது, இடையிடையே சாரலாய் இரவு 08.30 மணி வரை தொடர்ந்தது.

வைகை ஆற்றின் பாலம்...
தல்லாகுளம், காமராஜர் சாலை, கோரிப்பாளையம், காளவாசல், திருப்பாலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாலையில் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வெள்ளத்தில் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கோரிப்பாளையம் செல்லும் வைகை ஆற்றின் பாலம் அடிவாரத்தில் முழுவதும் மழை நீர், நதி நீருடன் சேர்ந்து காணப்பட்டது.

மதுரையில் மழை...
வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் தொடர்ந்து ஒன்றரை மணி நேரமாக மழை பெய்ததால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. திருமங்கலத்தில் தொடர்ந்து இரண்டு மணிநேரம் பலத்த மழை பெய்தது.
கடந்த இரு நாட்களாகவே மதுரையில் மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்குவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - அருண் பிரசாத், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.