தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. தமிழகம் முழுவதிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை காலை 10மணிக்கு வெளியிட்டார்.
மதுரை மாவட்டத்துக்கு 4ம் இடம்..
இதில் மதுரை மாவட்டம் 10ம் வகுப்பு அதிக தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் 4-வது இடமும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் 5-வது இடமும் பிடித்துள்ளது
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமாக தேர்வு எழுதிய மாணவர் மற்றும் மாணவிகளில் -District- என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: அருண் பிரசாத், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.