Home /News /madurai /

சர்வாதிகார அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளாசல்

சர்வாதிகார அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளாசல்

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்

PTR Palanivel Thiagarajan : நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் முதல் ஆளாக ஏற்போம் எனவும், சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வழங்கி துவக்கி வைத்தார்.

அப்போது மேடையில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.,
“ஒரு சமுதாயத்திற்கு கலாச்சாரமும், மொழியும் எவ்வளவு முக்கியமோ, ஒரு இயக்கத்துக்கு கொள்கையும், தத்துவமும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு அரசுக்கு மனிதநேயமும், செயல்திறனும். கொள்கையை விடவும் மனிதநேயமும், செயல்திறனும் தான் ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியம்.

இலவச திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கிறதா என பெரிய விவாதங்கள் நடக்கிறது. அந்த, விவாதங்களுக்கு அப்பால் முக்கியமானது செயல்திறன் தான். அரசு செயல்படுத்தும் திட்டம் சரியாக அனைத்து மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதே முக்கியம்.

தமிழக/ இந்திய வரலாற்றிலேயே பொருளாதாரம், சட்டம், மனிதவளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் சிறந்த மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது தனிநபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர், பிரதமருக்கு தலைமை ஆலோசகர்களாக இருந்த இரண்டு நபர் ஆகியோரின் அறிவுரைகளை கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

Must Read : விபத்தில் சிக்கியவருக்கு செய்த பேருதவி..108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் நேர்மைக்கு குவியும் பாராட்டு

இதற்குமேல் அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. நல்ல கருத்துக்களை, மனிதநேயமிக்க அறிவுரைகளை யார் சொன்னாலும் முதல் அரசாக ஏற்போம்.  ஆனால், சர்வாதிகாரமாக எங்களுக்கு தான் உரிமை, தகுதி உள்ளது என்பது போலும், நாங்கள் சொல்வதை தான் பின்பற்ற வேண்டும் எனும் அடிப்படையில் சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்” என்று தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: DMK, Madurai, Minister Palanivel Thiagarajan

அடுத்த செய்தி