Home /News /madurai /

ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஸ்ரீரங்கம் கோயில்

ஸ்ரீரங்கம் கோயில்

“இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, எந்த ஒரு மதத்தையோ, அவர்கள் வழிபாட்டு முறைகளையோ, மத நம்பிக்களையோ அவமதிக்கும் விதமாக எந்த ஒரு நிகழ்வும் எந்த அமைப்பும் நடத்த கூடாது”

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
இந்து மத நூலை எரிக்கும் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று, இந்து மத நூலை எரிக்கும் போராட்டத்திற்கு தடை கோரிய மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அளித்த மனுவில், மக்கள் அதிகாரம் அமைப்பினர், வேதங்களில் நம்பிக்கை கொண்ட இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்துக்களின் புனித நூல்களை எரிக்கும் போராட்டத்தை திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியாரின் பிறந்த நாளான நாளை (செப் 17)  நடத்த உள்ளதாக, சமூக வலைதலங்களில் அறிவித்து உள்ளனர்.

தந்தை பெரியார் பிறந்த நாளான நாளை (செப் 17), திருச்சி ஸ்ரீரங்கத்தில், இந்துகளின் புனித நூலான மனு ஸ்மிருதி, வேதங்கள், ஆகமங்களை எரித்து போராட்டம் நடத்த  உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு  தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த பொது நல மனு நீதிபதிகள் R.மகாதேவன்,  J.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் பொது மக்களின் அமைதிக்கு தீங்கு விளைவிக்க கூடாது. இந்து மதம் குறித்து தவறான கருத்துகளை பதிவு செய்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர். போலீசார் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். எனவே சட்டபடி மத நூல்களை எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக நாளை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் போலீஸ் பாதுகாப்ப வழங்கவும் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையும் வாசிக்க: அடுத்தவர் சாதனைக்கு அட்ரசை ஒட்டுவதுதான் திராவிட மாடலா? - அண்ணாமலை அறிக்கை

இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர், பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, எந்த ஒரு மதத்தையோ, அவர்கள் வழிபாட்டு முறைகளையோ, மத நம்பிக்களையோ அவமதிக்கும் விதமாக எந்த ஒரு நிகழ்வும் எந்த அமைப்பும் நடத்த கூடாது என கூறினார். மேலும் பொது மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் எந்த ஒரு நிகழ்விற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காது. இதை 2 தரப்பினரும் பின் பற்ற வேண்டும் என திருச்சி காவல் துறை சார்பில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பொது அமைதி நிலவ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாளை (செப். 17)  திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கும்,  கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் மேலதிக விசாரணைக்காக  வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 23ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Madurai High Court, Periyar Birthday, Srirangam

அடுத்த செய்தி