மதுரையில் மின் கட்டணம் சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “ மின்கட்டணம், சொத்துவரி, பெட்ரோல், டீசல் என எல்லாமே உயர்ந்துள்ளது. இதுதவிர ஜிஎஸ்டி எனக் கூறி நிறைய வரிச்சுமை போடப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு என்ன வழி இருக்கிறது. அதை அரசாங்கம் யோசிக்க வேண்டும். அரசாங்கம் என்பது மக்களுக்காக தான். கொரோனாவில் இருந்து இன்னும் மக்கள் மீளாத சூழ்நிலையில் வருமானம் இன்றி எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கும் போது, அரசுக்கு மட்டும் வருமானம் வரவேண்டும் என்று குறிக்கோளாக இருப்பது தவறான விஷயம்.
பேக் செய்யப்பட்ட அனைத்து உணவுகளுக்கும் ஜிஎஸ்டி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்காகத்தான் தேமுதிக சார்பில் தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மதுரை வந்த நோக்கமும் அது தான். மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கான அரசாங்கம் இருந்தால் தான் வரவேற்கக் கூடியதாக இருக்கும். எனவே, கேப்டன் (விஜயகாந்த்) கூறியபடி விலைவாசிகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.
பள்ளி மாணவிகள் தற்கொலை செய்யும் நிகழ்வு குறித்து செய்தியாளர்களை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர், “ கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறந்தது ஒரு பெரிய அதிர்வலையை, தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.அந்த மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஈரம் கூட காயாத சூழ்நிலையில், தினந்தோறும் மாணவிகள் தற்கொலை சம்பவம் நடைபெறுகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் போதாது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உண்மையில் அந்த மாணவிகள் கொலை செய்யப்படுகிறார்களா? அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்களா? என்பதை முதலில் தெரியப்படுத்த வேண்டும்.
தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடாமல் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். உண்மையில் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால் அதற்கான அழுத்தம் வர யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி மாணவிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தப்பு செய்திருந்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மீது நடத்தப்படும் விசாரணை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பல்வேறுபட்ட ஊழல் வழக்குகளை சுமத்தினார்கள். இன்று காங்கிரஸ் ஆட்சியில் இல்லை பாஜக ஆட்சி இருப்பதால் காங்கிரஸ் மீது என்றோ போடப்பட்ட அந்த ஊழலை கொண்டு வருகிறார்கள். யார் ஆளுங்கட்சியாக இருக்கிறார்களோ ஏற்கனவே ஆண்ட கட்சி மீது ஊழல் வழக்கு கொண்டு வருவது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருந்து வருவதற்கான ஒரு விஷயம்.
Must Read : போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் திடீர் நீரூற்று - வியப்பில் ஆழ்ந்த திருச்சி மக்கள்
யாராக இருந்தாலும் தப்பு செய்திருந்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும். உண்மையிலேயே தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனையை காங்கிரஸ் கட்சி அனுபவிக்க வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கேப்டன் சொன்னது போல ‘உப்புத் திண்பவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்’. தவறு செய்தால் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம் தான். உண்மையில் தப்பு செய்திருந்தால் தண்டனை கிடைக்கும் என பிரேமலதா தெரிவித்தார்.
செய்தியாளர் - சிவகுமார், (திருமங்கலம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMDK, Madurai, Premalatha Vijayakanth, Price hike, Protest, School student