ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை மாவட்ட மக்களே நாளை உங்க ஏரியாவில் மின்தடையா? - செக் பண்ணிக்கோங்க

மதுரை மாவட்ட மக்களே நாளை உங்க ஏரியாவில் மின்தடையா? - செக் பண்ணிக்கோங்க

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சோழவந்தான் துணை மின்நிலையத்தில் நாளை (23-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமு கராஜ் தெரிவித்துள்ளார்.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

மின்தடை பகுதிகள்:

சோழவந்தான், தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாராபட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், அச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை மற்றும் சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown