ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - உங்க பகுதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க

மதுரை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - உங்க பகுதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க

மதுரையில் மின் தடை பகுதிகள்

மதுரையில் மின் தடை பகுதிகள்

Madurai District | மதுரை மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சமயநல்லூர் உள்ளிட்ட சில துணை மின் நிலையங்களில் நாளை (13-12-2022) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடப்பதால் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமயநல்லூர் பகுதிகளின் மின் தடை:

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே சமயநல்லூர், தேனூர், கட்டபுளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மென்ட், பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அலங்காநல்லூர் பகுதி முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

அனுப்பானடி பகுதிகளின் மின் தடை:

அனுப்பானடி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே ராஜீவ்காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின்பால் பண்ணை, ஐராவதநல்லூர், பாபுநகர், கணேஷ்நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன்தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார்நகர், தாய்நகர், கங்காநகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான்நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.காலனி மற்றும் முந்திரிதோப்பு, சேவகப்பெருமாள் கோவில் பகுதிகளில் நாளை மின் வினியோம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தெப்பம் பகுதிகளின் மின் தடை:

தெப்பம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம்பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர்நகர், குருவிக்காரன்சாலை, ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புதுமீனாட்சி நகர், சி.எம்.ஆர்.ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகாநகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Must Read : மீண்டும் ஒரு புயல்? புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! புது அலெர்ட்!

இதேபோல, நவரத்தினம், பிஸ்சர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிக்காரத்தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி.ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ மற்றும் திருமகள் நகர் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown