Home /News /madurai /

அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கப்பட்டதாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கப்பட்டதாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

Madurai : அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் நீக்கப்பட்டு விட்டதாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் நீக்கப்பட்டு விட்டதாக மதுரையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஏற்படுத்தி வரும் பரபரப்புக்கு இடையே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரையில் அதிமுக மத்திய தொகுதியின் செயலாளராக இருந்த மிசா செந்தில் என்பவர், அதிமுக தலைமைக்கழக அறிவிப்பு என்ற பெயரில் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Must Read : அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்... சுயேட்சை சின்னத்தில் போட்டி?

போஸ்டர்


அதில், “கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகள் செய்த காரணத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  26.06.2022 முதல் நீக்கப்படுகிறார்கள். கழக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, EPS, O Panneerselvam, OPS, Poster

அடுத்த செய்தி