ஹோம் /நியூஸ் /மதுரை /

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு.. 28 காளைகளை அடக்கி வென்றார் தமிழரசன்!

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு.. 28 காளைகளை அடக்கி வென்றார் தமிழரசன்!

பாலமேடு ஜல்லிக்கட்டு, தமிழரசன்

பாலமேடு ஜல்லிக்கட்டு, தமிழரசன்

15 காளைகளை அடக்கிய ராஜா, தனது நண்பர் அரவிந்த் ராஜ் இறந்த சோகத்தில் பாதியில் வெளியேறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் அவனியாபுரத்தை தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய 4 மணிக்கு நிறைவடைய வேண்டிய போட்டிகள் 4:50 வரை நடைபெற்றது.

மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டியில் 806 காளைகளும், 306 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் 23 காளைகளை அடக்கி தமிழரசன் என்பவர் முதல் பரிசு வென்றார். 19 காளைகளை அடக்கி மணி 2ஆம் இடத்தை பிடித்தார். 15 காளைகளை அடக்கிய ராஜா, தனது நண்பர் அரவிந்த் ராஜ் இறந்த சோகத்தில் பாதியில் வெளியேறினார். இருப்பினும் மூன்றாம் இடத்தை தக்கவைத்தார்.

கருப்பசாமி கோயில் காளைக்கும் மாடுபிடி வீரர் தமிழரசன் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலர் வழங்கப்பட்டது.

First published:

Tags: Jallikattu, Madurai, Palamedu