ஹோம் /நியூஸ் /மதுரை /

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்.... போட்டியின் சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்.... போட்டியின் சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்

அவனியாபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சூர்யா அவிழ்த்த காளை வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 9 வயது சிறுவன் வளர்த்த காளையும், பெண்கள் வளர்த்த காளைகளும் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தன.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

சேலத்தை சேர்ந்த 3 வயது சிறுமி டோரா அவிழ்ந்த காளை வெற்றிபெற்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.  இதேபோல் அவனியாபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சூர்யா அவிழ்ந்த காளை வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதேபோல் பெண்கள் வளர்த்து வந்த காளைகளும் பரிசுகளை வென்று, வீரத்தை வெளிப்படுத்தின.

இந்த போட்டியில் மின்சார வாரியத்தில் கேங்க் மேனாக பணியாற்றும் மாடுபிடி வீரர் விஜய் என்பவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிஸ்ஸான் மேக்னைட் கார் பரிசாக வழங்கப்பட்டது.

First published:

Tags: Avaniyapuram, Jallikattu, Madurai