ஹோம் /நியூஸ் /மதுரை /

படுத்துட்டேன்ல.. பாலமேட்டில் காளையிடம் தனியாக சிக்கிய காவலரின் சுவாரஸ்ய செயல்!

படுத்துட்டேன்ல.. பாலமேட்டில் காளையிடம் தனியாக சிக்கிய காவலரின் சுவாரஸ்ய செயல்!

ஜல்லிகட்டு காளையிடம் இருந்து தப்பிய காவலர்

ஜல்லிகட்டு காளையிடம் இருந்து தப்பிய காவலர்

Palamedu jallikattu | தை 2ஆம் நாளான இன்று மதுரை பாலமேடு ஜல்லிகட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Palamedu

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையிடம் தனியாக சிக்கிய காவலர் ஒருவர் தரையில் படுத்து காளையின் திசையை திருப்பி தப்பி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை பாலமேடு ஜல்லிகட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் காளைகளும், மாடு பிடி வீரர்களும் களமிறங்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வாடிவாசலில் இருந்து வெளிவந்த ஜல்லிகட்டு காளையிடம் பாதுகாப்புக்காக இருந்த போலீசார் ஒருவர் தனியாக சிக்கி கொண்டார். அவரை கண்ட ஜல்லிக்கட்டு காளை அவரை முட்ட முயன்றது. இதனை அறிந்த காவலர் மல்லாக்க படுத்துவிட்டார். இதனை கண்ட ஜல்லிக்கட்டு காளை  அவரை ஏதும் செய்யாமல் விட்டு சென்றது.

அந்த நேரத்தில் மற்ற காவலர்கள் டெம்போவில் விரைந்து சென்று காவலரை காளையிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

First published:

Tags: Jallikattu, Palamedu, Pongal 2023